எம் . பி ., துவக்கிவைப்பு

X
கள்ளக்குறிச்சியில் உள்ள டேனிஷ்மிஷன் தொடக்கப்பள்ளியில் நடந்த முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் எம்.பி., டி.ஆர்.ஓ., பங்கேற்றனர். கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமை தாங்கினார். நகராட்சி கமிஷ்னர் சரவணன், நகராட்சி துணை சேர்மன் ஷமீம்பானு அப்துல்ரசாக், தாசில்தார் பசுபதி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் நகர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேற்று விரிவாக்கம் செய்து திட்டத்தை துவக்கிவைத்தார்.
Next Story

