வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பில் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பில் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.
வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பில் ஸ்ரீ கமல விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமி புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ கமல விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கைய்யா, கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் , காவல்துறை அதிகாரிகள் , காவலர்கள் அவர்கள் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி சிவாச்சாரியார் கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினார். இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story