சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
X
போலீசார் நடவடிக்கை
சேலம் கிச்சிப்பாளையம் புதிய சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்தவர் பரத்ராஜ் (வயது 20). இவர், தனது கூட்டாளிகள் கதிர்வேல், மோகன்ராஜ், ஹரிஹரன், அஜய் ஆகியோருடன் சேர்ந்து கடந்த மாதம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை மிரட்டி ரூ.3 ஆயிரத்தை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்ராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். ஏற்கனவே பரத்ராஜ் மீது திருட்டு, அடிதடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் தொடர்ந்து குற்றச்செயல்களில் பரத்ராஜ் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு கிச்சிப்பாளையம் போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், நேற்று பரத்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டார்.
Next Story