சேலம் செட்டிச்சாவடி ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி

சேலம் செட்டிச்சாவடி ஊராட்சியில் தார்சாலை அமைக்கும் பணி
X
அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட செட்டிச்சாவடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து டால்மியா எல்லை வரையிலான சாலையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் மிகவும் மோசமாக காணப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அருள் எம்.எல்.ஏ.வை சந்தித்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க அருள் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகிகள் முருகேசன், பாக்கியம், கோபி, செந்தில், வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. பெரிய கருக்கல்வாடி, கங்கானியூர், அழகுசமுத்திரம், கிருஷ்ணம் புதூர், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகள் மற்றும் நரசுக்காடு தொடக்கப்பள்ளிக்கு சென்று 'காலம் பொன்போன்றது கடமை கண் போன்றது' என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
Next Story