முருகனை தும்பிக்கையால் வழிபட்ட தெய்வானை.

முருகனை தும்பிக்கையால் வழிபட்ட தெய்வானை.
X
திருச்செந்தூர் முருகனை தும்பிக்கையால் வழிபட்ட தெய்வானை.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை உற்சாக குளியல். முருகனை தும்பிக்கையால் வழிபட்ட தெய்வானை. இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானை அதிகாலையிலேயே உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தது. அதற்காக யானை பராமரிக்கப்பட்டு வரும் இடத்தில் உள்ள ஷவரில் குளித்து மகிழ்ந்த யானை தனது தும்பிக்கையால் தண்ணீரை உடல் மீது பீய்ச்சி அடித்து குளித்து மகிழ்ந்து. தொடர்ந்து தெய்வனை அலங்கரிக்கப்பட்டு கோவில் முன்பு வந்தது. கோவில் முன்பு தனது முன்பக்க இரண்டு கால்களையும் மடக்கி நின்றபடி தும்பிக்கையை தூக்கி முருகனை வழிபட்டது. இதை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள சண்முகவிலாச மண்டபத்திற்குள் சென்று முருகனை வழிபட்டது. அதன் பிறகு கோவில் யானை தெய்வானைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு கோவிலை விட்டு வெளியே வந்த யானை தெய்வானையிடம் பக்தர்கள் ஆசி பெற்றுச் சென்றனர்.
Next Story