கிறிஸ்தவ ஆலயம் அருகே காவல் நிலையத்தின் கழிப்பறை

X
தூத்துக்குடியில் வழிபாட்டு தலம் அருகே, வடபாகம் காவல் துறையினர் புதிதாக கட்டியுள்ள கழிப்பறையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அகில இந்திய மீனவர் சங்கம் தேசிய தலைவர் அன்டன் கோம்ஸ் அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடியில் 312 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சிந்தா யாத்திரை மாதா ஆலயம் என்பது, மத நல்லிணக்கத்தின் அடையாளங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புடையது. மேலும் வடபாகம் காவல்நிலையம் நகரின் ஒரு ஓரத்தில் அமைந்திருப்பதை மாற்றி நகரின் மைய பகுதியில் அமைக்க வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. தற்போது வழிபாட்டு தலம் அருகே காவல் நிலையம் சார்பில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

