புத்தகத் திருவிழாவில் மாணர்களுக்கு பாராட்டு விழா

X
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் மாணவர்களைப் பாராட்டி உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஸ்வர் ரான் தலைமையில் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் வரவேற்றுப் பேசியநம் பதிப்பக நிறுவனரும் எழுத்தாளருமான இவள் பாரதி "வாசிப்பு வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள உதவும் ஒரு கருவி" என்றார். தலைமையுரை ஆற்றிய உதவி ஆட்சியர் (பயிற்சி) மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்தியம்பினார். பத்தாம் வகுப்பு மாணவர்கள் 21 பேருக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேருக்கும், ஆங்கிலத்தில் சிறப்பாக விளங்கிய 9 மாணவர்களுக்கும் 1500 ரூபாய, 1000 ரூபாய், 750 ரூபாய் என 50,000 ரூபாய் மதிப்புள்ள நூல்கள் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சிதம்பரநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரோஸிட்டா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story

