கோவை ஒண்டிப்புதூரில் முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்கம் துவக்கம் !
முதலமைச்சர் தளபதி அவர்கள் அறிவித்த மாணவர்களின் பசிப்பிணி போக்கும் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் மூலம் இனி மாநிலம் முழுவதும் 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இந்தத் திட்டத்தின் விரிவாக்கத்தை ஒண்டிப்புதூர் கதிர் மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் பள்ளி மாணவர்களுடன் உணவருந்தி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் சாமிநாதன், பேரூர் கழக செயலாளர் கபிலன், கழக கவுன்சிலர்கள், நிர்வாகிகள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



