வைரமடை-சிறுமி ஓட்டிய டூவீலர் மீது கார் மோதி விபத்து. சிறுமி படுகாயம்.
வைரமடை-சிறுமி ஓட்டிய டூவீலர் மீது கார் மோதி விபத்து. சிறுமி படுகாயம். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா கொக்குமடை பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகள் பிரதீபா.வயது 15. இவர் திங்கள் கிழமை மாலை 6 மணி அளவில் கரூர் கோவை -சாலையில் வைரமடை பிரிவு டூவீலரில் சாலையை கடந்து சென்றார். அப்போது திருப்பூரை சேர்ந்த விஸ்வேஸ்வரன் வயது 33 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் பிரதீபா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பிரதீபாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் அறிந்த கோவிந்தராஜ் அளித்த புகாரில் தென்னிலை காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய விஸ்வேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





