மரத்தில் பதுங்கிய மலைப்பாம்பு சிக்கியது

மரத்தில் பதுங்கிய மலைப்பாம்பு சிக்கியது
X
கருங்கல்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உலகன்விளை  பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவர். இவரது குடும்ப கல்லறை தோட்டம் பகுதியில் நேற்று தெரு நாய்கள் அதிக நேரம் குரைத்தபடி இருந்துள்ளது. இதனால் அப்பகுதி வாலிபர் ஒருவர் சென்று பார்த்தபோது அந்த கல்லறை தோட்டத்தில் உள்ள மரத்தில் மலை பாம்பு ஒன்று இருந்ததை கண்டார். உடன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குலசேகரம் வனச்சரக அலுவலர் பாலமுருகன் தலைமையிலான வலதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலை பாம்பை பிடிக்க முயன்ற போது,  மரக்கிளை முறிந்து பாம்புடன் கீழே விழுந்தது. இதனையடுத்து தரையில் விழுந்த பாம்பை வன ஊழியர்கள் பிடித்து சென்றனர். சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பேச்சிப்பாறை அடர்ந்த வனப் பகுதியில் கொண்டு விட்டனர்.
Next Story