வாலிபர் மாயம். தாயார் புகார்

வாலிபர் மாயம். தாயார் புகார்
X
மதுரை பேரையூர் அருகே செல்போன் கடையில் வேலை பார்த்த வாலிபர் மாயம் என அவரது தாய் புகார் அளித்துள்ளார்
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லாபுரம் மேல தெருவில் வசிக்கும் செல்வராஜ் மகன் சூர்யா( 22) என்பவர் பேரையூர் முத்து ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள பகவான் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் மீது வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், இவரது தாயார் நேற்று (ஆக.26) மாலை பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story