கோவையில் விபத்து: ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி
கோயம்புத்தூர் மாவட்டம், கணியூர் அருகே ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அவிநாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணியூர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அவிநாசியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



