மத்திகிரி அருகே நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை.

மத்திகிரி அருகே நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை.
X
மத்திகிரி அருகே நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியை அடுத்த கொத்தனூா் கிராமத்தை சோ்ந்தவா் விஜயகுமர் 2019-ஆம் ஆண்டு பணத்தகராரில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுக்கிரீவன், மஞ்சுநாத் மற்றொரு மஞ்நாத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுக்கிரீவனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1 ஆயிரம் அபராதமும் மற்றும் தடயங்களை மறைத்ததற்காக மேலும் ஒரு ஆண்டு, ஒரு மாதம் தண்டனையும் மற்றும் ரூ.1ஆயிரம் அபராதம் விதித்தார். போதிய ஆதாரம் இல்லாததால் மஞ்சுநாத் மற்றொரு மஞ்சுநாத் ஆகிய இருவரையும் விடுவிக்கப்பட்டனா்.
Next Story