கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை !

X
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர் இமெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய்கள் மற்றும் சிறப்பு படையினருடன் அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். அலுவலக கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம், பதிவறைகள், கூட்டரங்குகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டன. மிரட்டல் உண்மையா அல்லது தவறான தகவலா என விசாரணை நடைபெற்று வருகிறது. இமெயில் அனுப்பிய நபரை கண்டறிய சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக செயல்படுகின்றனர்.
Next Story

