கோவை நியாய விலைக் கடை ஆய்வு : வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் பார்வை !

கோவை நியாய விலைக் கடை ஆய்வு : வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் பார்வை !
X
கைரேகை கருவி பழுது – பொதுமக்கள் சிக்கலை தீர்க்க நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, வார்டு எண் 80, செட்டி வீதி அஷோக் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் கைரேகை கருவி அடிக்கடி பழுதடைவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியவில்லை என்ற புகார் எழுந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து, பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்தார். மேலும், பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் முழுமையாக கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Next Story