குப்பைகள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு

குப்பைகள் எரிப்பதால்  சுகாதார சீர்கேடு
X
குமாரபாளையம் அருகே குப்பைகள் எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
குமாரபாளையம் கிழக்கு காவேரி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மர்ம நபர்களால் எரிக்கப்படுகிறது. இதனால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, இங்கு குப்பைகள் எரிக்கப்படுவது தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் கூறியதாவது: காவேரி நகர் கிழக்கு பகுதியில் அதிக குடியிருப்புகள் உள்ள இடத்தில் குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனை மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை மூட்டம், அருகில் உள்ள பொதுமக்களுக்கு பல நோய்களை உருவாக்கி வருகிறது. இந்த பகுதியில் வசிக்கும் விமலா என்ற பெண், இந்த குப்பை புகையால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சேகரிக்கப்படும் குப்பைகள் உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story