அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...
X
அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் சி.பி.கே. கன்னையாதெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலை முதலை பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு யாகங்கள் நடைபெற்று ஸ்ரீ செல்வ விநாயகருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்வில் நாயுடு சங்க தலைவர் சிட்டி வரதராஜ், மற்றும் செயலாளர், துணைத் தலைவர், மற்றும் சங்க நிர்வாகிகள், விழா குழுவைச் சேர்ந்த தமிழ்செல்வன், ஹரி ராகவேந்திரா, மனோஜ், விக்கி, நந்த கிஷோர், நிர்மல், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story