சிறுகுடியில் சொத்து தகராறு தம்பி மீது வழக்கு

X
நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்தவர் பழனி(வயது 65) .இவரது தம்பி ஜோதி (62). இவர்கள் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜோதி தனது அண்ணன் பழனி வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து தரமாட்டாயா என கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கடப்பா கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பழனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பழனி நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் ஜோதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

