குமரி கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை

X
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் காணப்பட்டது. நேற்று புதன்கிழமை இரவு முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் நாளை 29ஆம் தேதி இரவு 8.30 மணி வரை நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 2 .3 முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய கடல் சார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story

