தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி !

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி !
X
தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி பேச்சுவார்த்தை
வால்பாறை உள்ளிட்ட தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிட்டு தொழிற்சங்கங்களும், ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்கமும் இடையே கோவையில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்தது. தொழிற்சங்கங்கள், 1.7.2025 முதல் தினக்கூலியில் இடைக்கால உயர்வாக ரூ.50 கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், நீலகிரி மற்றும் வயநாடு தோட்ட அதிபர்கள் சங்கங்கள் ஏற்கனவே தினக்கூலி ரூ.475 அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேல் வழங்க இயலாது எனவும் தெரிவித்தன. இதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால், எந்த ஒப்பந்தத்துக்கும் தொழிலாளர்களின் ஒப்புதல் பெறாமல் முன்வரமாட்டோம் என்று தெரிவித்தன. இதனால் பேச்சுவார்த்தை முடிவின்றி நிறைவடைந்தது.
Next Story