குமரி அரசு மருத்துவ கல்லூரியில் மனநல காப்பகம்

X
குமரிக்கு வட மாநிலங்களில் இருந்து ரயில்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திறங்கும் நிலையில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இது போன்ற நிலைகளை நிவர்த்தி செய்ய கலெக்டர் அழகுமீனா உத்தரவின் படி குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை புதுப்பித்து அரசு சார்ந்த மன நல காப்பகமாக அமைக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் மன நல காப்பகம் திறக்கப்பட உள்ளது. இந்த காப்பகம் என்.ஜி.ஓ. சார்பில் பராமரிக்கப்படும் காப்பகமாக இருந்தாலும் அரசு சார்ந்த காப்பகமாகவே இருக்கும். இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிக பட்சம் 30 நாட்கள் வரை அனுமதித்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்னர் குணமாக வில்லை. உறவினர்கள் யாரும் வர வில்லை என்றால் மாவட்டத்தில் அரசு அங்கீகாரத்துடன் இயக்கும் 18 மன நல காப்பகங்களில் ஏதாவது ஒரு காப்பகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள் .
Next Story

