நெரூர்- அடையாளம் தெரியாத வாகனம் மோதி எஸ்.ஐ படுகாயம்.

நெரூர்- அடையாளம் தெரியாத வாகனம் மோதி எஸ்.ஐ படுகாயம்.
நெரூர்- அடையாளம் தெரியாத வாகனம் மோதி எஸ்.ஐ படுகாயம். கரூர் மாவட்டம் எஸ். வெள்ளாளப்பட்டி முத்தையா காலனியில் வசித்து வருபவர் செந்தில்குமார். வயது 53. இவர் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று அருகில் உள்ள முச்சிலியம்மன் கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்தார். பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக செந்தில்குமார் மனைவி மகேந்திர மணி வயது 42 என்பவர் அளித்த புகாரில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story