வேட்டமங்கலம்- ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்தில் கும்பாபிஷேகம்.

வேட்டமங்கலம்- ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்தில் கும்பாபிஷேகம்.
வேட்டமங்கலம்- ஸ்ரீ செல்வ விநாயக ஆலயத்தில் கும்பாபிஷேகம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா வேட்டமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலிக்கு வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாட்டினை வேட்டமங்கலம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் செய்தனர்.
Next Story