பாரதிபுரம் விநாயகர் சதுர்த்தி விழாவில் வள்ளி கும்மியாட்டம் !

வள்ளி கும்மியாட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
கோவை, பாரதிபுரம் முத்துமாரியம்மன் கோவில் திடலில், விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சலங்கை ஒலி குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. ஆசிரியர் நடராஜர், இணை ஆசிரியர் பிரியா தலைமையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பாரதிபுரம் நாகராஜ், மாநில இணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார், ஸ்ரீ ராஜ தேவேந்திர ஸ்வாமிகள், ஒன்றிய செயலாளர் மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story