கோவை மாவட்டம் கணியூரில் சாலை மறியல் போராட்டம் !

சாலைகளில் பள்ளங்கள் – கூழ் மண் கொட்டியதால் போராட்டம்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே கணியூர் ஊராட்சியில் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் நெடுஞ்சாலைத் துறை கூழ் மண் கொட்டியதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். புழுதி வீடுகள், கடைகள், வாகன ஓட்டிகளை பாதித்ததால், பொதுமக்கள் கணியூர்–மாதப்பூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் தலையீடு செய்ததையடுத்து, நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கூழ் மண்ணை அகற்றினர். பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக்கொண்டன.
Next Story