வடக்கு பாளையத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை.
வடக்கு பாளையத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை. கரூர் எஸ் வெள்ளாளப்பட்டி அருகே வடக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் வயது 50 .இவரது மனைவி தங்கமணி வயது 42. அருணாச்சலம் அண்மைக்காலமாகவே போதைக்கு அடிமையாக இருந்தார். இதனால் தனது மனைவியிடம் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இதே போல நேற்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த காரணத்தால் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தங்கமணி அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story





