விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் !

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் !
X
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவையில் நாளை (வெள்ளிக்கிழமை) 418 சிலைகளும், 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 304 சிலைகளும் கரைக்கப்பட உள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி கோவையில் நாளை (வெள்ளிக்கிழமை) 418 சிலைகளும், 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 304 சிலைகளும் கரைக்கப்பட உள்ளதால் மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் துறை அறிவிப்பின்படி, பொள்ளாச்சி சாலை, உக்கடம், ஈச்சனாரி, குறிச்சி, ஆத்துப்பாலம், பேரூர், கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மாநகருக்குள் கனரக வாகனங்கள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி காவல்துறைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Next Story