விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தென்னை மரத்தில் பதநீர் இறக்க அனுமதி வழங்கவேண்டும்

X
திருப்பத்தூர் மாவட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தென்னை மரத்தில் பதநீர் இறக்க அனுமதி வழங்கவேண்டும்! சீரழிந்து வரும் பட்டு புழு வளர்ப்பு மேம்படுத்த வேண்டும்! உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இந்த விவசாயிகள் குரைதீர்வு கூட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர்,வாணியம்பாடி.ஜோலார்பேட்டை,மற்றும் ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்று விவசாயிகள் வாழ்வாதாரத்தை குறித்தும் தேவைகளை குறித்தும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் விவசாயி ஒருவர் கூறுகையில் அரசு மதுபான கடையை திறந்துவைத்து விவசாயம் சீரழித்து வருகின்றது விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்க கூடிய தென்னைமரம் அந்த தென்னைமரத்தில் பதநீர் இறக்கி விற்க்க அனுமதி வழங்கவேண்டும்! மற்றும் பட்டு புழு வளர்ப்பு சீரழிந்து வருகின்றது! அரசுக்கு சொந்தமான பட்டு வளர்ப்பு அலுவலகங்கள் மூடப்பட்டு செயல்படாமல் இருக்கின்றது பட்டு புழு வளர்ப்பு மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் தோட்டக்கலை சார்பில் தேனீக்கள் வளர்க்க விவசாயிகளுக்கு தேன் வளர்ப்பு பெட்டி முறைகேடு நாடைபெற்று வருகின்றது அரசு விவசாயிகளுக்கு வழங்கிய தேன் வளர்ப்பு பெட்டி தனி நபர் ஒருவர் 200 பெட்டி வைத்து கொண்டு 1500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்க கூடிய தேன் வளர்ப்பு பெட்டி துறைசார்பில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும் இதை குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீர்நிலைகளை கண்டு ஆக்கிரமிப்புகளை இவேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர் இந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story

