குளத்துப்பாளையத்தில் கோமாதா பூஜை!

X
பேரூர் அருகே குளத்துப்பாளையம் வீர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை கணபதி ஹோமம், 10 அடி வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்து தர்ம வித்யாபீட தலைவர் கேசவானந்த சாமி தலைமையில் 108 கோமாதா பூஜை நடைபெற்றது. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடந்தன. இன்று மூச்சுப் பயிற்சி, திருவிளக்கு பூஜை நடைபெற, நாளை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது.
Next Story

