முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில்  மரியாதை
X
கன்னியாகுமரி
வசந்த் அண்ட் கோ நிறுவனரும் கன்னியா குமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான வசந்தகுமாரின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மகன்கள் விஜய் வசந்த் எம். பி, வினோத்குமார், உட்பட குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஸ்குமார் எம். எல். ஏ, கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி. டி. செல்வகுமார், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கே. டி. உதயம் உட்பட காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நினைவிடம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . பின்னர் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Next Story