புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

X
Komarapalayam King 24x7 |28 Aug 2025 5:56 PM ISTகுமாரபாளையத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தாலுகாவில் உள்ள தாசில்தார் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்ட தாசில்தார்கள் பணியிட மாற்றம் அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது அதன் பெயரில் குமாரபாளையம் தாசில்தாராக இருந்த சிவக்குமார், திருச்செங்கோடு உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிமைப் பொருள் தனி தாசில்தாராக இருந்த பிரகாஷ் குமாரபாளையம் தாசில்தாராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய தாசில்தார் பிரகாஷ்க்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பிலும், அலுவலக ஊழியர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
