பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளியும் பாளையம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் - கொத்தமங்கலம் மெயின் ரோட்டில் வெள்ளியம் பாளையம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பவானிசாகர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராதேவி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story






