டி மார்ட் நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம். விக்ரமராஜா கரூரில் பேட்டி.
டி மார்ட் நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம். விக்ரமராஜா கரூரில் பேட்டி. கரூரில் உள்ள தனியார் விடுதி கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார்தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா. அப்போது தமிழகத்தில் உள்ள வணிகர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அயல்நாட்டு நிறுவனங்கள் டி மார்ட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் நாளை மறுநாள் சனிக்கிழமை 30 ஆம் தேதி திருச்சியில் உள்ள டி மார்ட் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாகவும் , அதற்கு கரூரில் இருந்து 1500 வணிகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
Next Story




