சேஷசாயி காகித ஆலை சார்பில் நடமாடும் தகன மேடை வழங்கல்

சேஷசாயி காகித ஆலை சார்பில் நடமாடும் தகன மேடை வழங்கல்
X
ஈரோடு ரோட்டரி ஆத்மா அறக்கட்டளைக்கு நடமாடும் தகனமேடை வழங்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி.ஆர்.எஸ் பகுதியில் அமைந்துள்ள சேஷசாயி காகித ஆலை நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் செயல்படும் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளைக்கு நடமாடும் தகன மேடை மொபைல் கிரிமட்டோரியம்) வழங்கும் நிகழ்வு சேஷசாயி காகித ஆலை வளாகத்தில் நடைபெற்றது.ஈரோடு ரோட்டரி ஆத்மா வளாகத்தில் இதுவரை இரண்டு நடமாடும் தகன மேடைகள் இயக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் கிராமப்புற சேவை அதிகரிக்கும் வகையில் சேஷாசாயி காகித ஆலை நிறுவனம் வழங்கிய சுமார் 35 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் மூன்றாவது நடமாடும் தகனமேடை உருவாக்கப்பட்டு ஆலை நிறுவனத்தின் தலைவர் என்.கோபாலரத்தினம் தலைமையில் ரோட்டரி சங்க நிர்வாகிகளிடம் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் சேஷசாயி காகித ஆலை நிறுவனம் சார்பில் பொது மேலாளர்கள் அழகர் சாமி ,சீனிவாசன், காகித ஆலை மக்கள் தொடர்பு அலுவலர் ரமணன், மற்றும் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை முன்னணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.....
Next Story