இந்து கடவுளை இழிவு படுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்து  கடவுளை இழிவு படுத்தியவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
பூதப்பாண்டி
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடந்த ஒரு விழாவில் பேசிய பேச்சாளர் இந்துக்களின் கடவுளாகிய சிவபெருமானையும் , சுடலைமாடசாமியையும் தகாத வார்த்தைகளால் பேசி இந்து மத கடவுளை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனதையும் புண்படுத்தி பேசியுள்ளனர். இதை கண்டித்து கேட்ட ஒரு இந்து நபரை அடித்து உதைத்து அவமானபடுத்தியுள்ளார்கள். இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய நபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய்வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் பூதப்பாண்டி வடக்கு தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்க்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பலர் கலந்து கொண்டனர்.
Next Story