ராசிபுரம் அருகே வீட்டு முன்பு இடையூராக வைக்கப்பட்டிருந்த பேனரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காவலர்கள் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது...

X
Rasipuram King 24x7 |28 Aug 2025 8:18 PM ISTராசிபுரம் அருகே வீட்டு முன்பு இடையூராக வைக்கப்பட்டிருந்த பேனரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காவலர்கள் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம் கூனவேலம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் காயத்திரி, இவர் தோனமேடு பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டியதாக கூறி பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் பல மனுக்கள் அரசு அதிகாரிகள் இடம் வழங்கியுள்ளனர். தொடர்ந்து கிராம மக்கள் காயத்திரி வீட்டின் முன்பு, 10 அடி உயரம், 20 அடி நீளத்திற்கு பேனர் மற்றும் அந்த பகுதியில் உட்கார கற்களை அமைத்துள்ளனர். இதனால், காயத்திரி வீட்டிற்கு சென்று வர சிரமம் ஏற்பட்டது. அவர் கட்டிடத்தில் உள்ள கடைக்கு யாரும் வாடகைக்கும் வரவில்லை. இதனால், விரக்தியடைந்த காயத்திரி ஊர் மக்களிடம் பேசிபார்தார். யாரும் பேனரை அகற்றவில்லை. இனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் காயத்திரி மனு தாக்கல் செய்தார். வீட்டிற்கு முன்பு பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு மே மாதம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்குள் அப்பகுதியில் உள்ளவர்கள் கருப்பனார் கோவில் ஒன்றையும் அமைத்துவிட்டனர். இந்நிலையில் நேற்று காலை, தாசில்தார் சசிக்குமார் மற்றும் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கோமதி அவர்கள் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்துறை அதிகாரிகள், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், 10க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றினர். தொடர்ந்து பேனர், உட்கார போட்டிருந்த கற்களை அகற்றினர். மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி விஜயகுமார் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கருப்பனார் கோவிலை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றனர்.பெண்ககள் ,பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய தயார் ஆனார்கள். தாசில்தார் சசிக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கோவிலை அகற்றுவதை அதிகாரிகள் நிறுத்தினர். மேலும், கைது செய்தர்களையும் விடுதலை செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் நேற்று காலை, 10 மணிமுதல் மதியம், 3 மணிவரை பரபரப்பாக காணப்பட்டது. குறிப்பு: மேலும் இந்த சம்பவத்தை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கச் சென்ற செய்தியாளர்களிடம் அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள், பொதுமக்கள் எதற்கு எடுக்கிறீர்கள், ஏன் எடுக்கிறீர்கள் இந்த செய்தி எந்த பேப்பரில், எந்த டிவியில் வரும், எதிலும் வருவதில்லை என செய்தியாளர் களிடத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது...
Next Story
