வேளாங்கண்ணி-க்கு பேருந்து சேவை அமைச்சர் துவக்கினார்

X
குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் அதிகளவு கிறிஸ்தவ மீனர்வகள் வசித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று வேளாங்கண்ணி தேவாலய திருத்தலத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். எனவே இத்திருவிழா மற்றும் தொடர்ந்து வேளாங்கண்ணிக்கு செல்ல மீனவ கிராம பகுதிகளில் பேருந்து வசதி இல்லை என்பதால் கடற்கரை பகுதி மக்களுக்கு வேளாங்கண்ணிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர். அக்கோரிக்கையினை பரிசீலித்து இன்று மாலை நீரோடி பேருந்து நிலையத்திலிருந்து குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக நாகர்கோவில் சென்று அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக 29.08.2025 அன்று அதிகாலை வேளாங்கண்ணி சென்றடையும். இதன் துவக்க நிகழ்ச்சி இன்று (28.08.2025) மாலை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. காங்கில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்பேருந்து சேவை வாராவாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீரோடி நோக்கியும் இயங்க இருக்கிறது.
Next Story

