தேசிய மாணவர் படை பயிற்சி வகுப்புகள் துவக்கம்.

தேசிய மாணவர் படை பயிற்சி வகுப்புகள் துவக்கம்.
X
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி வகுப்புகள் துவக்கம்
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான முதல் பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கப்பட்டது. ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கர்னல் கோபால் கிருஷ்ணா மற்றும் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் லெப்டினன் கர்னல் ராஜவேலு ஆகியோரின் ஆணையின் படியும் சுபேதார் மேஜர் கோவிந்தராவ் அவர்களின் ஆலோசனையின் படியும் ஈரோடு 15 ஆவது பட்டாலியனின் ஹவில்தார் ஷியாம் சுந்தர் அவர்கள் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 50 தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்சிகளை இன்று தொடங்கினார். மாணவர்களுக்கு வீரநடை பயிற்சிகள், துப்பாக்கிகள் பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு ஆர் மணி அவர்கள் என்சிசி யில் நல்ல முறையில் பயிற்சி பெற வேண்டும், இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி நீங்கள் ராணுவம் காவல் துறை ரயில்வே துறை அக்னிவீர் போன்றவற்றில் சேர்ந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றும் வாழ்த்தி பாராட்டினார். ஒவ்வொரு வருடமும் 50 மாணவர்களுக்கு 40 பயிற்சிகள் வகுப்புகள் மூலம் என் சி சி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஜனவரி மாதம் இறுதியில் இதற்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்று அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழானது மாணவர்களின் வேலை வாய்ப்புகளில் இரண்டு சதவீதம் ஒதுக்கீடுகளுக்கு வாய்ப்பு அளிக்கிறது . நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் அந்தோணிசாமி மற்றும் கவிராஜ் ஆகியோர் உடன் இருந்து ஏற்பாடு செய்தார்கள்.
Next Story