தாய்லாந்து அம்பாசிடர் விருது பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

தாய்லாந்து அம்பாசிடர் விருது பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
X
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கமலேஷ் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார்.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கமலேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச இளைஞர் மன்ற மாநாடு தாய்லாந்து, பாங்காங் நகரில் நடந்தது. இந்தியா உள்ளிட்ட 62 நாடுகளிலிருந்து அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். அரசு பள்ளியில் 8ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் திறன் மிகுந்த மாணவர்கள் பரிந்துரைக்கபட்டிருந்தனர். இதில் கமலேஷ் அம்பாசிடர் எனப்படும் சர்வதேச பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி நேரில் அழைத்து பாராட்டினார். இதற்கு முன்பு பயின்ற குமாரபாளையம் வாசுகி நகர் ஒன்றிய அரசு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் பி.டி.எ. தலைவர் பாலசுப்ரமணி, தலைமை ஆசிரியை நாகரத்தினம் உள்பட ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story