மலையம்பட்டு விநாயகர் மற்றும் வீரஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா.
ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீ அருள்மிகு வழித்துணை விநாயகர் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோயில்களில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மங்கள இசை, கணபதிபூஜை, புண்யாகவாசனம், எஜமான சங்கல்பம், வாஸ்துபூஜை பிரவேசம், துவாரபூஜை, கலசபூஜை, கணபதி ஹோமம், லஷ்மிஹோமம், பஞ்சசக்த ஹோமம், கோ பூஜை, துவார பூஜை, தம்பதி சங்கல்பம், மஹாபூர்ணாஹூதி, மகாதீபாரதனை, கலச புறப்பாடு, யாத்ரா தானம், யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் எடுத்துச் சென்று ஆஞ்சநேயர் சிலைக்கும், விநாயகர் கோயில் விமானத்தின் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜோதிடர் ஸ்ரீரா.குமரேசன் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் கௌரி தாமோதரன், களம்பூர் அபிராமி ரைஸ் மில் எம்.சங்கர் மற்றும் திருக்கோயில் நிர்வாகம், மகா கும்பாபிஷேக விழா கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story



