பாவூர்சத்திரம் வயல் பகுதியில் தீ விபத்து விவசாயிகள் வேதனை

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் இருந்து ஆவுடையானூர் செல்லும் சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வயல்வெளி பகுதியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் பயிர்கள் எரிந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதை கண்ட பகுதி விவசாயிகள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வயலில் இருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் தீயணைப்பு துறையினரை அப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

