தேன்கனிக்கோட்டை அருகே ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டை ஊராட்சிச் செயலாளராக பணிபுரிந்து வந்த ஹேமந்த் சீனிவாசன் மீது தொடா்ச்சியாக பொதுமக்கயிடம் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. விசாரணையில் அவா் சரியாக பணி செய்வதில்லை எனவும் ஊராட்சி அலுவலகத்திற்கு வராமல் எப்போதும் அலுவலகம் பூட்டி உள்ளதும் கூறப்டுகிறது. இந்த நிலையில் 15 நாள்களுக்கும் மேலாக இந்த பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யாததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 2-ம் தேதி அன்று மறியலில் ஈடுபட்டனா். இதை அடுத்து குந்துகோட்டை செயலாளா் ஹேமந்த் சீனிவாசை தற்காலிக பணி நீக்கம் செய்து தளி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
Next Story

