பைக் விபத்தில் தலை சிதைந்து பெண் உயிரிழப்பு

X
நாகர்கோவில் அடுத்த மேல மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிறைட் (53) ஒய்வு பெற்ற சி ஆர் பி எப் வீரர். இவரது மனைவி ஜோஸ் சுதா (52). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் சுங்கான்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று கணவன் மனைவி இருவரும் மார்த்தாண்டம், சென்னி தோட்டம் பகுதியில் பிரைட்டுடன் பணிபுரியும் நபரின் மகளின் திருமண வீட்டிற்கு சென்று விட்டு, இறச்சகுளம் செல்லும் சாலை அருகே மாலை சுமார்4.30 மணிக்கு வரும் போது பின்னால் வேகமாக வந்த டிம்போ மோதியதில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பிறைட்டிற்க்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ஜோஸ் சுதாவிற்க்கு தலை மற்றும் முகம் சிதைந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜோஸ் சுதா ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போவை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் மல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

