புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் துவக்கி வைத்தார்

புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் நீதியரசர் துவக்கி வைத்தார்
X
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் இலக்கிய களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் விக்டோரியா கௌரி தொடங்கி வைத்து பார்வையிட்டார்
திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் மற்றும் இலக்கியக் களம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதியரசர் விக்டோரியா கௌரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நேற்று இரவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக முதல் விற்பனையை உதவி ஆட்சியர் (பயிற்சி) வினோதினி பார்த்திபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கள்ளக்குறிச்சி சுபதர்ஷினி ஆகியோர் வெளியிட திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர் முனைவர் பொன்முத்துராமலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார், திண்டுக்கல் இலக்கியக் களம் தலைவர் முனைவர் மனோகரன், செயலாளர் எழுத்தாளர் இராமமூர்த்தி, நிர்வாக செயலாளர் கண்ணன், பொருளாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story