மனைவியை அரிவாளால் தாக்கிய கணவன் கைது

மனைவியை அரிவாளால் தாக்கிய கணவன் கைது
X
அரூர் அருகே மனைவியை அரிவாளால் தாக்கிய கணவனை கோபிநாதம்பட்டி காவலர்கள் கைது செய்தனர்
அரூர் அருகே உள்ள பே.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் இவருடைய மனைவி சந்தியா, குடும்பத் தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய சந்தியா அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 15 நாட்களாக குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று வியாழக்கிழமை மாலை அங்கு சென்று தகராறு செய்த சுந்தர் திடீரென அரிவாளால் மனைவி சந்தியாவை வெட்டினார். இதில் காயமடைந்த சந்தியா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் கோபிநாதம்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story