தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மதியம் விடுமுறை

X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது மேலும் மாணவர்கள் வீட்டிற்கு திரும்புதில் சிரமங்கள் ஏற்படா வகையில் புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதியிலுள்ள அனைத்துவகை பள்ளிகளும் மதியம் விடுமுறை அளித்து மாணவர்களை பத்திரமாக அனுப்பிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 29/08/2025 இன்று நடைபெறும் மாதத்தேர்வுளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை முதன்மை அலுவலர் ரெஜினி அறிவித்துள்ளார். .
Next Story

