கோவை சாலையில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு !

கோவை சாலையில் லாரி சிக்கி போக்குவரத்து பாதிப்பு !
X
கோவை 24 மணி நேர குடிநீர் திட்டம்: சாலை சீரமைப்பில் பொதுமக்கள் அதிருப்தி.
கோவை மாநகராட்சி சார்பில் நடைபெறும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. ஆனால், சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் வாகனங்கள் அடிக்கடி பள்ளங்களில் சிக்கி வருகின்றன. நேற்று புலியகுளம் ஜி.வி. ரெசிடென்சி 4-ரோடு சந்திப்பில் லாரி ஒன்று பள்ளத்தில் சிக்கியதால், அவினாசி ரோடு–திருச்சி ரோடு இணைப்புச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலைகள் சரியாக சீரமைக்கப்படாததால் இவ்வாறான சிக்கல்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி, அதிகாரிகள் பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story