தனியார் உணவகத்தில் இரண்டு லட்சம் கொள்ளை.

X
மதுரை வாடிப்பட்டி அருகே மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி தனியார் உணவகத்தில் நேற்று முன் தினம் (ஆக. 27) இரவு பணத்தை கல்லாபெட்டியில் வைத்து உணவகத்தில் பூட்டி சென்று விட்டு நேற்று (ஆக. 28) காலை கடையை திறந்து பார்த்த போது ரூ.2 லட்சம் பணம் கல்லாபெட்டி உடைக்கப்பட்டு திருடு போனது தெரிந்தது. போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

