ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று 8000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ளது ஒகேனக்கல் காவிரியாறு, சமீப நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஒகேனக்கல் வனப்பகுதிகளிலும், பொழியும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக 6500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 29 வெள்ளிக்கிழமை இன்று காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 8000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story