கோவை குற்றாலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு – சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டது

X
கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னர், நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, கடந்த 22-ம் தேதி வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வருகைக்காக திறக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம், தற்போது வெள்ளப்பெருக்கால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குற்றாலம் சூழல் சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வானிலை சீராகி வெள்ளப்பெருக்கு குறைந்ததும், சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
Next Story

